சமுதாயத்தின் மிக பெரும் அவமானமாக இருப்பது இந்த சாதி ... சீமான் இன்று இயக்கத்தை கட்டி எழுப்புகிற நோக்கில் புறப்பட்டு இருக்கிறார் அடுத்த கட்டமே அரசியல் இயக்கம் ....
நாம் தமிழர் என்கிற முழக்கம் சாதியால் பிரிந்து கிடக்கும் தமிழனை ஒன்றிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்,,,அதை நம்பி தான் இன்று பல தம்பிகள் அவர் பின்னால் அணிவகுத்தார்கள்.. ஆனால் சீமான் தன்னோடு ஒட்டி கொண்டிருக்கும் ஒரு சில ஆதிக்க சக்திகள் ஆனந்த பட வேண்டும் என்பதற்காக தேவரின் பக்கம் படை எடுத்திருகின்றார்....அம்பேத்கர் படத்துக்கு மாலை போட்டோம் ? தேவர் படத்துக்கு போடகூடாதா ? என்ன கேள்வி இது ? யாரை யாரோடு ஒப்பிடுவது ? சாதி ஒழிப்பு போராளிக்கும் சாதி வெறியனுக்கும் ஒப்பீடா ? ,,,,
தேவர் தமிழன் மராட்டியன் அல்ல ? என்று சொல்ல வருகிண்டீரே .. இன்று உங்க பின்னால் உங்களை நம்பி இருக்கும் தம்பிகள் எல்லாம் யாரால் மனிதர்களை மதிக்க பட்டார்களோ அவரையே விட்டு விட்டு நீங்கள் செய்ய போகும் அரசியல் தான் என்ன?
தமிழர்களாய் இணைய வேண்டும் என்கிறீர்கள் ? அவர் அவர் சாதிய உணர்வோடு தமிழர்களாய் இணைத்து என்ன செய்ய போகிறீர்?
துரோகி கருணாவும் தமிழன் தான் ? இளங்கோவனும் தமிழன் தான் இவர்களை வைத்து நாம் எப்படி ஈழத்தை மீட்க முடியாதோ அதை போல தான் சாதி வெறியர்களையும் சாதி தமிழனையும் வைத்து நமக்கான எதையும் மீட்க முடியாது என்பதை உணருங்கள் தோழர்களே எத்தனை முறை ஏமாத்தினாலும் அவங்க பின்னாடி போறிங்களே நீங்க ரொம்ப நல்லவங்க .....

Labels: அம்பேத்கர், சாதி

இடுப்பில் துண்டை கட்டுவதற்கு நாங்கள் அஞ்சுவதில்லை -ஆனால்
அடுப்பில் வைத்து சமைக்க தான் எங்களுக்கு அரிசி இல்லை
அடிமைகளாய் வாழ்ந்து விட்டோம் இன்னும் விடியவில்லை!
அஞ்சிய எங்கள் நெஞ்சே அழிவின் எல்லை!
அஞ்சி கெஞ்சி வாழ்ந்தது போதும்-
அடிமை எண்ணம் மீள்வதை காண்போம் !

உதிக்கும் சூரியன் உனக்கென உதிப்பதில்லை !
நிலவு பொழியும் ஒளி எங்கள் மேல் விழ மறுப்பதில்லை !
உலக இயற்கை ஒன்றும் எங்களை பிரிக்கவில்லை !
மனிதனின் மனதில் மட்டும் இது என்ன அடிமை தொல்லை!
உரிமை கொண்ட உலகை காண்போம் !
உணர்வினை எரிக்கும் நெருப்பை அணைப்போம் !
உரிமை வளர்க்கும் பயிரினை விதைப்போம் !
அன்பினை விதைக்கும் சமத்துவம் படைப்போம் !
சாத்திரம் சொல்லும் அரகர்களை
ஆத்திரம் கொண்டே அடங்கிட வைப்போம் !
கோத்திரம், குலம் என்போரை அலங்கோலம் செய்வோம்!
சாதி என்போனை சதி செய்து கொல்வோம்..!
மோதி மிதிப்போம், அந்த முட்களை எடுப்போம் !
மதம் என்று மந்திரம் சொல்வோரை பதம் பார்த்து வைப்போம் !
கள்ளமில்லா உள்ளம் கொண்ட மாந்தர்களை மதிப்போம் !
களையெடுத்து காளையராய் புதியதோர் சமுதாயம் படைப்போம் !
- நீ. இரமணன்
நின்றாலும், நிற்காதடி.....
3 Comments Published by Ramanan N on Wednesday, June 3, 2009 at 10:05 PM.
குருடனாகி போன என் வாழ்கைக்கு,
விழியாய் நீ !.
என் உடலுக்கு கிடைத்த,
இன்னொரு உயிராய் நீ !
விழியாய் நீ !.
என் உடலுக்கு கிடைத்த,
இன்னொரு உயிராய் நீ !
தாயாகி நீ தந்த பாசம் !
என் தோள் சாய்ந்து இளைப்பாறும் நேசம்!
என் தோள் சாய்ந்து இளைப்பாறும் நேசம்!
இமை மூடும் இருளிலும்,
புன்னகைத்த உன் முகம்!
என் நினைவோடு,
உரசி போகும் -
அர்த்தமில்லா சிரிப்போடு,
அர்த்தமுள்ள வலியோடு.
புன்னகைத்த உன் முகம்!
என் நினைவோடு,
உரசி போகும் -
அர்த்தமில்லா சிரிப்போடு,
அர்த்தமுள்ள வலியோடு.
என்னை சுற்றி திரியும்-
உன் பேச்சு
அதை இழந்து தவிக்கும்,
என் உயிர் மூச்சு -
நின்றாலும், நிற்காதடி-
உன் நினைவும் நீயும்
உன் பேச்சு
அதை இழந்து தவிக்கும்,
என் உயிர் மூச்சு -
நின்றாலும், நிற்காதடி-
உன் நினைவும் நீயும்
-நீ. இரமணன்.
Labels: கவிதை, காதல், நின்றாலும் நிற்காதடி
சாதியை பற்றி பேசினாலே தவறா ? ....
3 Comments Published by Ramanan N on Friday, May 8, 2009 at 3:53 PM.
சாதியை பற்றி பேசினாலே தவறா ? ....
சாதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன ? அதன் தோற்றம் இதை பற்றி எல்லாம் ஆராயாமலே பலர் சாதி என்ற பேய் பிடித்து ஆடுகின்றனர் .. சாதியை பற்றி யாருமே அறியாத விதத்தில், ஒரு ஆராய்ச்சி கட்டுரையை எழுதி இருந்தார் அம்பேத்கர் ... அம்பேத்கரின் சாதியை பற்றிய அந்த கண்ணோட்டம் மிக தேர்ந்த ஞானியின் கட்டுரையாக இருந்தது ... அந்த ஆராய்ச்சி கட்டுரையை சமர்பிக்கும் போது அம்பேத்கருக்கு வயது 20 .. சாதியை பற்றி தான் ஆராய வேண்டும் என்று அம்பேத்கர் அன்று முடிவெடுத்து அதனை சமர்பித்தது சின்ன வயதில் அவருக்கு ஏற்பட்ட சாதிய ஒடுக்கு முறைகள் அந்த சமுதாய மக்கள் மீது திணிக்கப்பட்ட அடக்கு முறைகள் அவரை சாதி பற்றிய ஆராய்ச்சிக்கு உட்படுத்தியது ...
அந்த கட்டுரையை சமர்ப்பித்து எத்தனையோ ஆண்டுகள் ஆகியும் சாதியை ஒழிக்க எத்தனையோ போராட்டங்கள், மாற்றங்கள், தலைமைகள் வந்தாலும் இன்று வரை அந்த சாதிய உணர்வு என்பது அனைத்து தரப்பினரிடமும் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ ,உளவியல் ரீதியாகவோ பரவலாக இருக்கின்றது.
இதனை சிலர் வெளிபடையாக சாதி சங்கங்கள் வைத்து சாதிய உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள் ... பொதுநல வாதி என்று பறைசாற்றி கொண்டிருக்கும் சிலரும் மறைமுகமாக சாதிய உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள் ..
இன்று நகரத்திலே சொகுசு வாழ்கையில் சாதியை மறந்து சமத்துவத்துடன் வாழ்கிறார்கள் என்று பொய் பரப்புரை செய்து கொண்டிருக்கும் சிலரின் முகத்திரையை கிழித்தெறிய தாழ்த்தபட்ட மற்றும் ஒடுக்கபட்ட மக்களை திரட்டி சங்கங்கள் அமைத்தால் அதனை சாதி சங்கங்கள் என்று முத்திரை குத்தி அந்த மக்களை அணிதிரளாமல் செய்வதிலே உயர் சாதி இந்துக்களும் , சாதிய உணர்வாளர்களும் குறியாக உள்ளனர் ..
சாதியை பற்றி பேசினாலே சாதி வெறியன் என்று சொல்பவர்கள் ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் ..
ஒரு தாழ்த்தபட்டவனும், ஒடுக்கபட்டவனும் சாதியை பற்றி பேசுவதற்கும் ஒரு உயர் சாதிக்காரன் சாதியை பற்றி பேசுவதற்கும் எத்தனையோ வித்தியாசங்கள் உள்ளது..
சாதி என்ற ஒரு அமைப்பினால் ஆண்டாண்டு காலமாக உரிமைகள் மறுக்கபட்டு, உணர்வுகள் மழுங்கடிக்கபட்டு பிறப்பால் மட்டுமே ஒருவனை ஒடுக்கும் அடக்கு முறைக்கு ஆட்படுத்தபட்ட மக்கள் அந்த சாதியை எந்த கோணத்தில் பார்க்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ...
"இப்படிபட்ட இழிவான சாதி முறை ஒழிக்கப்படவேண்டும் சாதி என்பது அடியோடு அழிக்கப்படவேண்டும்" என்று ஓடுக்கப்பட்ட மக்கள் சாதிய ரீதியாக ஒருங்கிணைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் ..
அப்படி ஒருங்கிணையும் சக்திகளை ஒடுக்க நினைபவன் சாதி வெறியனா? இல்லை சாதியை ஒழிக்க போராடுபவன் சாதி வெறியனா ?...
அந்த அடக்குமுறை ஆட்படுத்தபட்டு அந்த மக்களிடம் சாதி வெறி இருக்காது சாதி மீது தான் வெறி இருக்கும்
என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் ...
இந்த யுகம் நவினமயமாக மாறிபோய் உள்ளது.. மனித வாழ்கை முறைகளில் எத்தனையோ மாற்றங்கள் ... ஆண்டாண்டு கால பழக்க முறைகளிலும் நகர்புற வாழ்கையிலும் எத்தனையோ மாற்றங்களை மனித வாழ்வியல் மாற்றங்களை உளவியல் மாற்றங்களை மனிதன் சந்தித்து இருக்கின்றான்...அதனை மாற்றங்களையும் ஏற்றுக்கொண்டு வாழ்கையை செலுத்தும் மனிதன் இந்த சாதி முறையில் இருந்து விடுபடும் மாற்றத்திற்கு மட்டும் தயாராக இல்லை

சாதியை ஒழிக்க தாழ்த்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட ஓரணியில் திரள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டு சாதி மறுப்பாளர்களும் , பெரியாரிய ,அம்பேத்கர் வாதிகளும் சாதியை ஒழிக்க ஓரணியில் நின்று மனிதனின் உளவியல் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்
சாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் ....
சாதி ஒழிப்போம் சமத்துவம் படைப்போம்..
சாதி ஒழிப்பே ! மக்கள் விடுதலை
---- நீ. இரமணன்

Labels: அம்பேத்கர், சாதி, பெரியார்